பேருவளை கரையோர பகுதியில் இன்று வியாழக்கிழமை பிற்பகல் சிறிய நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் 3.7 மெக்னிடியூட் அளவில் பதிவாகியுள்ளது.
பேருவளையில் இருந்து சுமார் 34 கிலோமீற்றர் தொலைவில் இன்று பிற்பகல் 1 மணியளவில் இந்நிலநடுக்கம் உணரப்பட்டதாக, புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
எனினும், இதனால் சுனாமி அச்சுறுத்தல் இல்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
