-ஆர். நிரோசன்-
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இன்று வியாழக்கிழமை காலை பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் இன்று காலை இடம்பெற்றது.
இந்நிலையில் குறித்த கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றிருந்த இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோரை மாவட்ட செயலக வளாகத்திற்குள் நுழைய விடாது பொலிஸார் தடுத்தனர்.
இதனையடுத்து அவ்விடத்தில் குழப்ப நிலை உருவாகியது.
அத்துடன், பொலிஸாரின் இந்த நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பிய போது, அரசாங்க அதிபரின் உத்தரவிற்கமையவே தாம் இவர்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதனைத்தொடர்ந்து மாவட்ட செயலகத்திற்கு முன்னால் அரசாங்க அதிபருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.



