மட்டக்களப்பு – மயிலத்தமடு மாதவனை பண்ணையர்களை விரட்டியடித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஞாயிற்றுக்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டம் இடம்பெறும் செங்கலடி பகுதியில் அதிகளவிலான இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் வானில் ஹெலிகாப்டரும் வட்டமிடுவதை அவதானிக்க முடிகின்றது.
இதனால் அப்பகுதிக்குயில் வன்முறை வெடிக்கும் அபாயம் உள்ளதுடன் பதற்றம் நிலவுவதாக அங்கிருந்து எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

