Sri Lanka Tamil News Site

மட்டக்களப்பு – காத்தான்குடி பிரதேச செயலகம் தேசிய ரீதியில் இரண்டாம் இடம்

- Advertisement -

தேசிய உற்பத்தித்திறன் விருது வழங்கும் விழா – காத்தான்குடி பிரதேச செயலகம் தேசிய ரீதியில் இரண்டாமிடம்!!

தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் அரச பிரிவு சார்பாக 2020ம் ஆண்டுக்கான தேசிய உற்பத்தித்திறன் விருது வழங்கும் நிகழ்வில் மட்டக்களப்பு – காத்தான்குடி பிரதேச செயலகம் தேசிய ரீதியில் இரண்டாமிடம் இடத்தை பெற்றுள்ளது.

தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய உற்பத்தித்திறன் விருது வழங்கும் நிகழ்வானது நேற்று வியாழக்கிழமை அலரி மாளிகையில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பிரதமர் தினேஷ் குணவர்த்தன அவர்களின் தலைமையில் கோலாகலமாக இடம்பெற்றது.

- Advertisement -

இந் நிகழ்வில் அரச பிரிவு சார்பாக 2020ம் ஆண்டுக்கான தேசிய உற்பத்தித்திறன் போட்டியில் மட்டக்களப்பு – காத்தான்குடி பிரதேச செயலகம் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டமைக்கான விருது மற்றும் சான்றிதழ் என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விருதினை காத்தான்குடி பிரதேச செயலாளர் யூ.உதயஸ்ரீதர் பெற்றுக்கொண்டுள்ளார்.

 

- Advertisement -