மட்டக்களப்பு சின்ன ஊறணி சந்தியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளது.
- Advertisement -
ஏறாவூரில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த பேருந்தே இவ்வாறு வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியின் அருகில் நின்ற மரத்தில் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
பேருந்தில் 5 பயணிகளே பயணித்த நிலையில், இருவர் படுகாயமடைந்து மட்டு. போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- Advertisement -