Sri Lanka Tamil News Site

டிக்டொக் செயலியை தரவிறக்கம் செய்ய தடை

- Advertisement -

தமது அரசாங்கத்தின் ஊழியர்கள் சீனாவுக்கு சொந்தமான செயலியான டிக்டொக்கை அரசாங்கத்திற்கு சொந்தமான சாதனங்களில் பயன்படுத்துவதைத் தடுக்கும் சட்டமூலத்தை அமெரிக்க செனட் சபை கடந்த புதன்கிழமை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றியது.

ஜனாதிபதி ஜோ பைடனின் அனுமதிக்கு செல்வதற்கு முன்னதாக, இந்த சட்டமூலம் அமெரிக்க பிரதிநிதிகள் சபையால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

- Advertisement -

தேசிய பாதுகாப்பு மற்றும் மாநிலத் துறைகள் உள்ளிட்ட பல மத்திய அரசு நிறுவனங்கள் ஏற்கனவே அரசுக்குச் சொந்தமான சாதனங்களில் இருந்து டிக்டொக்கை தடை செய்துள்ளன.

‘டிக்டொக் அமெரிக்காவிற்கு ஒரு பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலாகும் அரச சாதனங்களில் அதற்கு இடமில்லை’ என்று காங்கிரஸ் கட்சியின் செனட்டர் ஒருவர் முன்னதாக தெரிவித்தார்.

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட எந்த உபகரணத்திலும் செயலியை பதிவிறக்கம் செய்ய தடைவிதித்து உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -