அந்தரங்க பகுதியில் தாக்கிய பந்து : சிறுவன் பலி

இந்தியாவின் மகாராஷ்டிரா பகுதியில் கிரிக்கெட் விளையாடிய  சிறுவனின் அந்தரங்க பகுதியில் பந்து பட்டதில் மைதானத்திற்குள் விழுந்து உயிரிழந்துள்ளான்.

புனே பிரதேசத்தை சேர்ந்த ஷௌர்யா என்ற 11 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுவன் பந்து வீசிய நிலையில் துடுப்பாட்ட வீரர் பந்தை நேரடியாக அவரை நோக்கி அடித்துள்ளார்.

இதில் ஷௌர்யாவின் அந்தரங்க பகுதியில் பந்து பலமாக பட்டதால் அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார்.

இதையடுத்து சிறுவன் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடாத்தி வருகின்றனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்