வவுனியாவில் பின்தங்கிய கிராம பாடசாலை சாதனை

வவுனியா கோவில்புளியங்குளம் பாடசாலை சாதனை 2024ஆம் ஆண்டுக்கான வலய மட்ட பெருவிளையாட்டு போட்டியானது நேற்று புதன் கிழமை வவுனியா கனகராயங்குளம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

குறித்த போட்டியில் பங்கு பற்றிய வவுனியா கோவில் புளியங்குளம் முத்தமிழ் வித்தியாலய மாணவர்கள் 15 வயத்தின் கீழ் ஆண்களுக்கான எரிபந்து போட்டியில் வலயமட்டதில் 3ஆம் இடத்தினை பெற்று மாகாண மட்டதிற்கு தெரிவாகியுள்ளனர்.

இவர்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர் ஜெ. முகுந்தினி பாடசாலை அதிபர் மா. அரவிந்தன் மற்றும் போட்டியில் பங்குபற்றி பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவர்களுக்கும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் கிராம மக்களும் பழைய மாணவர்களும் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இப்படசாலையானது பின்தங்கிய கிராம புர பாடாசாலையாக இருந்தாலும் கூட பல நிகழ்வுகள் போட்டிகள் என வலய மட்டம் மாகாண மட்டம் மற்றும் தேசிய மட்டத்திலும் பல பல வெற்றிகளையும் சாதனைகளையும் நிகழ்த்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்