கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் கடந்த ஒரு வாரத்துக்கு மருத்துவக் காரணங்களால் நான்கு சிசு மரணங்கள் இடம்பெற்றுள்ளதோடு பிரசவத்தாய் ஒருவரின் கருப்பையும் அகற்றப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட தரப்பினர் இது தொடர்பில் எழுத்து மூலம் மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு முறையிட்டுள்ளதோடு, மருத்துவர்களின் அக்கறையின்மை மற்றும் உரிய நேரத்தில் உரிய சிகிச்சைகளை வழங்காதுவிட்டமையே காரணம் என குற்றம் சுமத்தியுள்ளனர்.
அத்துடன் குற்றம் சாட்டப்பட்டுள்ள குறித்த சந்தர்ப்பங்களின் போது ஒரு குறித்த பயிற்சி மகப்பேற்றியல் வைத்திய நிபுணரே சம்பந்தப்பட்டிருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே, இது தொடர்பில் மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவிக்கையில் “குறித்த முறைப்பாடுகள் தனக்கு கிடைத்துள்ளதாகவும் தாம் இது குறித்த ஆரம்ப புலன் விசாரணைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளதாகவும் கூறியிருந்தார்”.