18 வயது சிறுவனின் தவறால் உயிரிழந்த 5 வயது குழந்தை

காற்று துப்பாக்கி ஒன்று தவறுதலாக இயங்கியதில் ஏற்பட்ட காயங்களினால் 05 வயதுடைய குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

கதிர்காமம், தெட்டகமுவ பிரதேசத்தில் பதிவாகிய இந்த சம்பவத்தில், குழந்தையின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

படுகாயமடைந்த குழந்தை கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

18 வயதுடைய சிறுவன் ஒருவனின் வசம் இருந்த ஏர் ரைபிள் தவறுதலாக இயக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக குறித்த சிறுவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.