நாடளாவிய ரீதியில் 981 சந்தேக நபர்கள் கைது

கடந்த வருடத்தில் இலங்கையில் போதைப்பொருளை ஒழிப்பதற்காக இராணுவம் விசேட வேலைத்திட்டங்களை ஆரம்பித்ததுடன் நாடளாவிய ரீதியில் 981 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, தேடுதல் நடவடிக்கையின் போது 715 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா, 685 கிலோ உள்ளூர் கஞ்சா, 1 கிலோ ஹெரோயின், 13 கிலோ கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் (ICE) ஆகியவற்றை ராணுவத்தினர் கைப்பற்றினர்.

மேலும், 831 சந்தேக நபர்களுடன் கணிசமான அளவு குஷ் மற்றும் ஹஷிஸ் போதைப்பொருள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், சட்டவிரோதமாக உற்பத்தி செய்யப்பட்ட 28,000 லீற்றர் மதுபானம் மற்றும் 57 வெளிநாட்டு மதுபான போத்தல்களுடன் 89 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், சட்டவிரோத சிகரெட்டுகள் (12 பொதிகள்/ 8653 சிகரெட்டுகள்/ 15 அட்டைப்பெட்டிகள்),  போதை மாத்திரைகள் (10 அட்டைகள்/ 75181 மாத்திரைகள்)  61 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஆபத்தான போதைப்பொருள் கட்டளைச் சட்டத்தின் விதிகளின் கீழ் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளது.