கொழும்பை சுற்றியுள்ள பல பகுதிகளுக்கு போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்ட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
களனி, களுத்துறை, பாணந்துறை, நுகேகொட உள்ளிட்ட பல பிரதேசங்களுக்கும் இவர்கள் ஹெரோயின், கஞ்சா மற்றும் ஹசீஸ் போன்ற போதைப் பொருட்களை விநியோகித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்ட போது, 7 கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
- Advertisement -
மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவர்கள் கொட்டாஞ்சேனை, வத்தளை மற்றும் திக் ஓயா ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள்.
எவ்வாறாயினும், சந்தேகநபர்கள் வத்தளை பிரதேசத்தில் தற்காலிக தங்குமிடமொன்றில் தங்கியிருந்த நிலையில் இது தொடர்பான போதைப்பொருள் கடத்தலை மேற்கொண்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
- Advertisement -