Sri Lanka Tamil News Site

உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரை தாக்கிய இரு இளைஞர்கள் கைது

- Advertisement -

கல்கிசை பிரதேசத்தில் கடமைக்கு சென்றிருந்த உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரை தாக்கிய இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு நகர போக்குவரத்து பொலிஸில் கடமையாற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் சுலனி வன்சநாத சானக இத்தமல்கொட, கடந்த டிசம்பர் 27 ஆம் திகதி இரவு உணவிற்காக கல்கிசையில் உள்ள தனது நண்பரின் வீட்டிற்கு சென்றிருந்தார்.

கல்கிசை டி சாரம் வீதியில் காலி வீதியை நோக்கி அவர் நடந்து சென்று கொண்டிருந்த போது,  காரில் வந்த சந்தேக நபர்களை சந்தித்துள்ளார்.

- Advertisement -

இரண்டு இளைஞர்களும் உதவி பொலிஸ் அத்தியட்சகரிடம் ஒரு ஹோட்டல் பற்றி விசாரித்தனர், பின்னர் இரண்டாவது முறையாகவும் விசாரித்துள்ளனர், அவர் இரண்டாவது முறையாக பதிலளிக்காததால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனையடுத்து, காரில் இருந்து இறங்கிய இளைஞர்கள் பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கியுள்ளனர், சம்பவத்தை தொடர்ந்து கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கல்கிசை பொலிஸார் சந்தேகநபர்கள் இருவரையும் கடந்த புதன்கிழமை இரவு கைதுசெய்துள்ளனர்.

- Advertisement -