முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 81ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொலைபேசி மூலம் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இன்று புதன்கிழமை தனது பிறந்தநாளைக் கொண்டாடும் மஹிந்த ராஜபக்ஷவை, ரணில் விக்ரமசிங்க தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் தொடர்புகொண்டு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இலங்கையின் ஐந்தாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷ, 1945ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் திகதி பிறந்தார். அந்த வகையில், இன்று தனது 81ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
இவர் 2005ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை இலங்கையின் ஜனாதிபதியாகப் பதவி வகித்ததுடன், பின்னர் பிரதமராகவும் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.










