அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி, நாட்டின் வர்த்தக வங்கிகளில் இன்று புதன்கிழமையும் பெரும்பாலும் மாற்றமின்றிக் காணப்படுகிறது.
இதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 336 ரூபாய் முதல் 337 ரூபாய் வரையான மட்டத்தில் பதிவாகியுள்ளது.
செலான் வங்கியின் அறிவிப்பின்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 328.50 ரூபாயாகவும், விற்பனை விலை 337.75 ரூபாயாகவும் மாற்றமின்றிக் காணப்படுகிறது.
என்டிபி வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 328.30 ரூபாயிலிருந்து 328.20 ரூபாயாகவும், விற்பனை விலை 337.30 ரூபாயிலிருந்து 337.20 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளது.
மக்கள் வங்கியில் டொலரின் கொள்வனவு விலை 328.65 ரூபாயாகவும், விற்பனை விலை 336.80 ரூபாயாகவும் மாற்றமின்றிப் பதிவாகியுள்ளது.
கொமர்ஷல் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 326.77 ரூபாயாகவும், விற்பனை விலை 336.70 ரூபாயாகவும் காணப்படுகிறது.
சம்பத் வங்கியிலும் அமெரிக்க டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை விலைகள் முறையே 328.75 ரூபாய் மற்றும் 336.75 ரூபாய் என மாற்றமின்றிக் காணப்படுகின்றன.










