Sri Lanka Tamil News Site

எல்லை நிர்ணய அறிக்கை அடங்கிய மகஜர் கையளிப்பு

- Advertisement -

 

–அம்பாறை நிருபர்-

சாய்ந்தமருது பிரதேசத்திற்கான எல்லை நிர்ணய அறிக்கை அடங்கிய மகஜர் முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரசின் தேசிய தலைவருமான ஏ.எல்.எம். அதாவுல்லாவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

கொழும்பில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை சாய்ந்தமருது பிரதேசத்தை பிரதிநிதித்துவபடுத்தும் தோடம்பழ சுயேட்சை கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் மாளிகைக்காடு சாய்ந்தமருது பெரிய ஜும்மா பள்ளிவாசல் நிர்வாக உறுப்பினர்கள் ஆகியோர் எல்லை நிர்ணய அறிக்கையை கையளித்தனர்.

உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் வட்­டா­ரங்கள் இனப்­ப­ரம்பல் நிலத்­தோற்றம் மற்றும் பொது வச­தி­களை கருத்திற் கொண்டு புதி­தாக எல்லை நிர்­ண­யத்­துக்கு உட்­ப­டுத்­தப்­படும். தேசிய எல்லை நிர்­ண­யக்­கு­ழு­வுக்கு வழங்­கப்­பட்­டுள்ள காலக்­கெ­டு­வுக்கும் எல்லை நிர்­ணயப் பணி­களை பூர்த்தி செய்­வ­தற்கு உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேசிய எல்லை நிர்­ண­யக்­குழு எதிர்­பார்த்­துள்­ள நிலையில் மேற்படி சந்திப்பில் மகஜர் கையளிக்கப்பட்டு, குறித்த மகஜரில் எதிர்காலத்தில் சாய்ந்தமருது பகுதியில் 7 வட்டாரங்களின் தேவை குறித்தும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதுடன் 7 வட்டாரங்கள் கிடைக்காவிடினும் கூட 6 வட்டாரங்களையாவது பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறும் அதில் தெரிவித்துள்ளனர்.

மேலும், மேற்குறித்த சந்திப்பில் சாய்ந்தமருது பிரதேசத்திற்கான தேவைப்பாடுகள் அபிவிருத்திகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டும் முக்கிய முடிவுகள் எட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்சந்திப்பில் மாளிகைக்காடு -சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாயல்களின் நிர்வாகிகள், உள்ளுராட்சி மன்ற வேட்பாளர்கள், வர்த்தக பிரதிநிதிகள், என பலரும் கலந்துகொண்டனர்.

- Advertisement -