2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை இடம்பெறும் திகதிகள் நாளை வியாழக்கிழமை அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.