ஏறாவூர் மிச்நகர் சந்தியில் புகையிரதத்தில் முச்சக்கர வண்டி மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்து இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் அப்துல் றகுமான் ரமீஸ் (38 வயது) என்பவரே உயிரிழந்துள்ளார்.
சன நெரிசல் மிக்க பகுதியிலே எந்த வித அடிப்படை பாதுகாப்பும் இல்லாத ரயில் கடவை காரணமாக அநியாயமாக உயிர்கள் பறிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

