Sri Lanka Tamil News Site

வீதியோரத்தில் இருந்து பொலிஸ் உத்தியோகத்தரொருவரின் சடலம் மீட்பு

- Advertisement -

வவுனியா தாண்டிக்குளத்தில் பொலிஸ் உத்தியோகத்தரொருவரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது.

தாண்டிக்குளம் பகுதியில் உள்ள வீதி வளைவு பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றிற்கு அருகில் காணப்பட்ட சடலம் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் பொலிஸ் உத்தியோகத்தர் என தெரியவந்துள்ளது.

- Advertisement -

குறித்த மரணத்திற்கு காரணம் விபத்தாக இருக்கலாம் என தெரிவிக்கப்படும் நிலையில், வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, சடலம் குறித்த பகுதியில் இருந்து பொலிஸ் உத்தியோகத்தரின் அறிவுறுத்தலுக்கமைவாக பொதுமக்களின் உதவியுடன் வவுனியா வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

- Advertisement -