மட்டக்களப்பு மாவட்டம், ஏறாவூர்-ஐயங்கேணியில் நீர் தேங்கி நிற்கும் பகுதியில், பழுதடைந்த நிலையில் கைவிடப்பட்ட கைக்குண்டு ஒன்றை, நேற்று புதன்கிழமை மாலை மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
பொது மக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவல் ஒன்றையடுத்து, அந்த பகுதிக்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து, வவுணதீவு விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கும் பிரிவினர் வரவழைக்கப்பட்டு, நீதிமன்ற உத்தரவை பெற்று, கைக்குண்டை வெடிக்க வைப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.