மட்டக்களப்பில் தாயுடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தால் தவறான முடிவெடுத்த யுவதி

மட்டக்களப்பு சின்ன உப்போடை பகுதியில்  இளம்பெண்ணொருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்

இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் மட்டக்களப்பு குடா வீதி சின்னஉப்போடையை சேர்ந்த ஜானசெல்வம் பிரியதட்சாயிணி (வயது 23) என்ற இளம்பெண்ணே உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில் இளம்பெண் மட்டக்களப்பில் உள்ள தனது பெற்றோர் மற்றும் சகோதரர்களுடன் வசித்து வருகின்றார். தங்கையின் படிப்பு செலவுகளை குறித்த இளம்பெண்ணே பொறுப்பேற்றுள்ள நிலையில் தங்கைக்கு வகுப்பு கட்டணம் செலுத்துவதற்காக தனது தாயாரிடம் 4000 ரூபாய் கொடுத்துள்ளார்

இந்நிலையில் அந்த 4000 ரூபாவில் 2000 ரூபாயை  இளம்பெண்ணின் தாயார் செலவு செய்துள்ளார். இதனை அறிந்த அவர் தாயாருடன் வாக்குவாதப்பட்டுள்ளார்.

அதன்பின்  முற்பகல் 11.30 மணியளவில் அறைக்குள் சென்று தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

12.30 மணியளவில் இளம்பெண்ணின்  சகோதரர் கதவை உடைத்து பார்த்த போது அவர்  தூக்கில் தொங்கியவாறு காணப்பட்டுள்ளார். உடனே அவரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலையில் தெரிவித்ததாக என உயிரிழந்த இளம்பெண்ணின்  குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.