Last updated on May 13th, 2024 at 10:16 am

மூவின மக்களிடையே சமாதானத்தை உருவாக்கும் நடை பவணி

மூவின மக்களிடையே சமாதானத்தை உருவாக்கும் நடை பவணி

எமது விசேட செய்தியாளர் -எஸ்.துஷியந்தன்-

நாட்டில் மூவின மக்களிடையே சமாதானமும் நல்லிணக்கத்தினையும் ஏற்படுத்தும் நோக்குடன் நேற்று சனிக்கிழமை நடைபவணி இடம்பெற்றது.

சமாதானம் சமூகப்பணி நிறுவனத்தினால் வறப்பத்தான் சேனை சந்தியில் இருந்து இறக்காமல் கலாசார மண்டபம் வரையில் சமூகங்களிக்கிடையில் சகவாழ்வை கொண்டு செல்வது சமூக ஒற்றுமை மற்றும் சமாதானத்தினை கட்டியெழுப்பும் நோக்குடன் குறித்த நடைபவணி  இடம்பெற்றது.

இதன்போது அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே. ஜெகதீசன், சமாதானமும் சமூகப் பணியும் நிறுவனத்தின் பணிப்பாளர் த.தயாபரன், த.ராஜேந்திரன், உட்பட ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர்கள் பதியத்தலாவ, இறக்காமம், தமன, நிந்தவூர், காரைதீவு, ஆகிய பிரதேச நல்லிணக்க குழுக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க