உரித்து காணி ஆவணம் வழங்கும் நடமாடும் சேவை

ஜனாதிபதியின் பணிப்புரையில் ‘உரித்து தேசிய வேலைத்திட்டத்தின்” கீழ் பொதுமக்களுக்கான நிபந்தனையற்ற பூரண அளிப்பினை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் மக்களை தெளிவூட்டல் மற்றும் ஆவணங்களை பொறுப்பேற்றல் தொடர்பான நடமாடும் சேவை இரண்டாவது நாளாக இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவிலும், மாணிக்கமடுவில் அமைந்துள்ள இறக்காமம் – 07 ம் கிராம உத்தியோகத்தர் காரியாலயத்திலும் இடம்பெற்றது.

இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம்.றஸ்ஸான் (நளீமி) ஆலோசனையில், உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி அஹமட் நசீல் தலைமையில் உரித்து காணி ஆவணம் வழங்கும் நடமாடும் சேவை சிறப்பாக நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதேச செயலக காணிப் பிரிவு காணி உத்தியோகத்தர்கள், காணி வெளிக்களப் போதனாசிரியர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இறக்காமம் – 03,04 மற்றும் இறக்காமம்-07 ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு இவ் நடமாடும் சேவை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்