மனித மூளைக்குள் மைக்ரோசிப் : எலான் மஸ்கின் ஆராய்ச்சிக்கு அனுமதி
எலான் மஸ்க், நியூராலிங்க் என்ற நிறுவனம் மூலம் நரம்பியல் தொடர்பான நோய்களுக்கு தொழில்நுட்பம் மூலம் மருத்துவ உபகரணங்களை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
அவர் இதனை தமது X தளத்தில் பதிவொன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார் .
கர்ப்பப்பை வாய் முதுகெலும்பு காயம் அல்லது தசையூட்டமற்ற பக்க மரப்பு நோய் காரணமாக உங்களுக்கு குவாட்ரிப்லீஜியா இருந்தால், நீங்களும் இந்த சோதனைக்கு உட்படலாம் என நியூராலிங்க் தெரிவித்துள்ளது.
அத்துடன், முதல் மனித நோயாளி விரைவில் நியூராலிங்க் கருவியைப் பெறுவார் என்று அவர் பதிவிட்டுள்ளார். முழு உடல் இயக்கத்தை மீட்டெடுக்கும் திறன் கொண்டது மைக்ரோ சிப் எனவும் தெரிவித்துள்ளார் .
நியூராலிங்க் மனித மூளையில் மைக்ரோசிப்பை பொருத்தி சோதனை செய்வதற்காக நோயாளிகளை அனுமதிக்க தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எலோன் மஸ்க் ஸ்டீபன் ஹாக்கிங்கிற்கு இந்த சிகிச்சை கிடைத்து இருந்தால் கற்பனை செய்து பாருங்கள் என்று தனது பதிவில் தெரிவித்துள்ளார் .