128 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்த அமெரிக்க திருடனுக்கு பிரமாண்டமாக இறுதி ஊர்வலம் செய்யப்பட்டமை பேசுப்பொருளாக மாறியுள்ளது.
அமெரிக்காவின் – பென்சில்வேனியா பகுதியை சேர்ந்த ஸ்டோன்மேன் வில்லி என அறியப்படும் திருடன், திருட்டு வழக்கில் கைதாகி, சிறையில் இருக்கும் போதே கடந்த 1895ஆம் ஆண்டு சிறுநீரக கோளாறு காரணமாக உயிரிழந்துள்ளார்.
ஒரு நூற்றாண்டுக்கு முன்பு பிக்பொக்கெட் செய்ததற்காக கைது செய்யப்பட்டபோது அவர் போலி பெயரைக் கொடுத்ததால், அந்த நபரின் உண்மையான அடையாளம் தெரியவில்லை.
இவரது உடலை உறவினரிடம் ஒப்படைப்பதற்காக அதிகாரிகள் பதப்படுத்திய போது எதிர்பாராத விதமாக மம்மியானர்.
பின்னர், இவரின் குடும்பத்தினரைக் கண்டுபிடிக்கும் முயற்சி தோல்வியில் முடிந்த நிலையில், பென்சில்வேனியாவில் மம்மியாக காட்சிப்படுத்தப்ப்பட்டார்.
வரலாற்று ஆவணங்கள் ஸ்டோன்மேன் வில்லியின் உண்மையான பெயரை அடையாளம் கண்டுள்ளன.
இந்தநிலையில், இந்த வார இறுதியில் அவரது உடல் அடக்கம் செய்யப்படும்போது அவரது கல்லறையின் அடிப்பகுதியில், பெயர் பொறிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
