சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான கடன் வசதியின் இரண்டாம் தவணை கொடுப்பனவு தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அவர்கள் நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை வரவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு நாட்டின் பொருளாதார நிலைமைகள், வரிக்கொள்கை குறித்தும் அவதானம் செலுத்தும் என நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.