-மூதூர் நிருபர்-
திருகோணமலை-மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜபல் நகர் பகுதியிலுள்ள, வீடு ஒன்றை உடைத்துக் கொண்டு வீட்டினுள் நுழைந்து பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் பேருந்து சாரதி காயமடைந்து மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பேருந்தில் பயணித்த மூவர் சிறு காயமடைந்துள்ளதாகவும் தெரிய வருகிறது.
திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கதிர்காம யாத்திரிகைகளை இறக்கிவிட்டு திருகோணமலை நோக்கி பயணித்த குறித்த பேரூந்து, சாரதியின் தூக்க கலக்கத்தினால் பாதையைவிட்டு விலகி வீடொன்றின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் வீடு சேதமாக்கப்பட்டு வீட்டில் இருந்த உபகரணங்களும் சேதமாகியுள்ளன.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.