திருகோணமலை – துறைமுகப் பொலிஸ் பிரிவிற்கு உற்பட்ட கிறீன் வீதியில் பரிசு கொடுக்க வந்துள்ளதாக கூறி வீட்டுக்குள் வந்த வாலிபர் ஒருவர் வீட்டில் இருந்த முதாட்டியிடம் இருந்து ஐந்து பவுண் தங்க தங்கிலியை அபகரித்து சென்றுள்ளதாக துறைமுக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இலக்கத்தகடு இல்லாத இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு இளைஞரால் மேற்படி கொள்ளை இடம்பெற்றதாக துறைமுக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேகநபரை துரத்திச் சென்ற ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் தேடுதல் நடைபெறுவதாக துறைமுக பொலிஸார் தெரிவித்தனர்.