தங்கத்தின் விலை அதிகரிப்பு

அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையில் இடம்பெற்று வரும் வர்த்தகப் போரினால் உலக சந்தையில் தங்கத்தின் விலை 30 சதவீதம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,357.40 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

கொழும்பு செட்டியார் தெருவின் தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் 262,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் 240,000 ரூபாவாகவும், 18 கரட் தங்கம் 197,500 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு கிராம் 32,750 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 30,000 ரூபாவாகவும், 18 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 24,688 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்