-அம்பாறை நிருபர்-
கல்முனை மாநகர சபையில் வருமான பரிசோதகர்களாக கடமையாற்றி, அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்று செல்லும் கே.குணரட்னம் மற்றும் எம்.சலீம் ஆகியோருக்கும் இங்கிருந்து இடமாற்றம் பெற்று செல்லும் வருமான பரிசோதகர் எம்.ரி.சப்னம் சாஜிதாவுக்குமான பிரியாவிடை நிகழ்வு மாநகர சபையின் நிதிப் பிரிவினரின் ஏற்பாட்டில் நேற்று முன்தினம் திங்கட்கிழமைமாலை நடைபெற்றது.
மாநகர சபையின் கணக்காளர் கே.எம்.றியாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி பிரதம அத்தியாக கலந்து கொண்டிருந்தார்.
இதன்போத பிரதி ஆணையாளர் ஏ.எஸ்.எம்.அஸீம் பொறியியலாளர் ஏ.ஜே.ஏ.எச்.ஜௌஸி ஆகியோர் உட்பட நிதிப் பிரிவு உத்தியோகத்தர்களும் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது குறித்த உத்தியோகத்தர்கள் மூவரும் பொன்னாடை போர்த்தி நினைவு சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டனர். கல்முனை மாநகர சபையில் இவர்கள் ஆற்றிய அர்ப்பணிப்பு மிக்க சேவைகளை பாராட்டி உரையாற்றிய ஆணையாளர் மாநகர சமூகத்தின் சார்பில் நன்றியும் வாழ்த்தும் தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்



