நானுஓயாவில் மீண்டும் விபத்து
-நானுஓயா நிருபர்-
நானுஓயா ஈஸ்டல் ரதல்ல குறுக்கு வீதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு லொறியொன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர்
லொறியில் நால்வர் பயணித்த நிலையில் இருவர் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
செங்குத்தான குறித்த வீதியில் சிறிய வளைவு ஒன்றில் லொறி கட்டுப்பாட்டை இழந்து தேயிலை மலையில் விழுந்துள்ளது விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த வீதியில் இதற்கு முன்னரும் பல விபத்துக்கள் ஏற்பட்டதை தொடர்ந்து தகுந்த தடையாளிகளை பயன்படுத்தி வாகனங்களை செலுத்த வேண்டும் என பல அறிவிப்பு பலகைகளும் இவ்வீதியில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், நாது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.னுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் கனரக வாகனங்கள் பயணிப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ள நிலையில் ஒருசில கனரக வாகனங்கள் இவ்வீதியில் பயணிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்