யாழ். வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு காணாமல் போன மோட்டார் சைக்கிள் இன்று வியாழக்கிழமை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
வெற்றிலைக்கேணியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரின் (BCN 8166) என்னும் இலக்கமுடைய மோட்டார் சைக்கிளே நித்தியவெட்டை காட்டுப் பகுதியில் இருந்து மருதங்கேணி பொலிசாரால் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக இதுவரை எரும் கைது செய்யப்படவில்லை என்பதோடு மீட்கப்பட்ட மோட்டார் சைக்கிளை நீதிமன்றில் முற்படுத்துவதற்கு மருதங்கேணி பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்