-யாழ் நிருபர்-
அராலி மேற்குஇ வட்டுக்கோட்டை பகுதியில் மூதாட்டி ஒருவர் கால் தவறி கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த ஆறுமுகம் தங்கம்மா என்ற மூதாட்டியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த மூதாட்டி கிணற்றில் தண்ணீர் அள்ளுவதற்கு முயன்றவேளை கிணற்றினுள் விழுந்தது உயிரிழந்தாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் அவரது சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.