-யாழ் நிருபர்-
யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருக்கு கீழ் இயங்கும் யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாண பொலிஸ் போதை தடுப்பு பிரிவினரால் யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டைப் பகுதியில் சுற்றிவளைப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
இந்த சுற்றி வளைப்பின் போது 9 லீற்றர் கசிப்புடன் 53 வயதுடைய நபர் ஒருவர் கைது இன்று வெள்ளிக்கிழமை செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவரை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது