நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தாழ்நில பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
களுகங்கை, கிங்கங்கை, நில்வலா கங்கை மற்றும் அத்தனகலு ஓயாவை சுற்றியுள்ள தாழ்நில பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாயம் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
மேலும் களனி கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் நாகலகம் வீதி பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.