-கல்முனை நிருபர்-
05.10.2022 தொடக்கம் 09.10.2022 வரை கந்தளாய் லீலாரெத்ன விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற கிழக்கு மாகாணமட்ட பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டு விழாவில் மட்/பட்/களுதாவளை மகாவித்தியாலயம் தேசிய பாடசாலை 123 புள்ளிகளுடன் முதலாம் இடத்தினைப் பெற்றுக் கொண்டதோடு வெற்றிக்கிண்ணத்தையும் 25,000 ரூபா பணப்பரிசினையும் தனதாக்கிக் கொண்டனர். இவ்விளையாட்டு விழாவில் 15 தங்கப்பதக்கங்கள், 09 வெள்ளிப்பதக்கங்கள், மற்றும் 08 வெண்கலப்பதக்கங்களையும் தட்டிச்சென்றனர். அத்தோடு 18 வயதின் கீழ் ஆண்கள் பிரிவில் சிறந்த மெய்வல்லுனர் வீரராக செல்வன் எம்.கதுஸ்கர் அவர்களும் சிறந்த பெண்அஞ்சல் குழுக்களாகவும் தெரிவு செய்யப்பட்டனர். அத்தோடு கிழக்கின் முதல் கல்வி வலயமாக 194 புள்ளிகள் பெற்று பட்டிருப்பு கல்வி வலயம் முதலிடம் பெற்றுக்கொண்டது.
முதல் நிலை பெற்ற பாடசாலைகள் விபரம்.
1வது மட்/பட்/களுதாவளை மகாவித்தியாலயம் தேசிய பாடசாலை – 123 புள்ளிகள்
2வது திரு/கந்/அக்ரபோதி தேசிய பாடசாலை – 46 புள்ளிகள்
3வது மட்/பட்/செட்டிபாளையம் மகாவித்தியாலயம் – 42 புள்ளிகள்
முதல் நிலை பெற்ற கல்வி வலயங்களின் விபரம்
பட்டிருப்பு கல்வி வலயம் – 194
கந்தளாய் கல்வி வலயம் -94
கல்முனை கல்வி வலயம் – 88
