-யாழ் நிருபர்-
நேற்று திங்கட்கிழமை பாடசாலை மாணவர்களுக்கிடையிலான தேசிய மட்ட அரை மரதன் ஓட்டப்போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்ட முழங்காவில் மகா வித்தியாலய மாணவன் சுமன் கீரன் கிளிநொச்சிக்கு வந்த போது குறித்த மாணவனின் கிராமம் ஆன குமுழ் முனை கிராம மக்கள் பல்லவராஜன் கட்டு சந்தியிலிருந்து வாகனத்தில் மாலைகள் அணிவித்து குறித்த மாணவனை அழைத்து சென்றனர்.
குறித்த மாணவன் கிராமத்திற்கு சென்ற போது கிராமமே திரண்டு குறித்த மாணவனுக்கு அமோக வரவேற்பு அளித்தது. தொடர்ந்து கிராம மக்கள் பாடசாலைக்கு அழைத்து சென்றனர்.
பாடசாலை சமூகத்தினரும் குறித்த மாணவனுக்கு அமோக வரவேற்பு அளித்தனர். மாணவனின் பெற்றோர் மற்றும் பாடசாலை அதிபர், பயிற்றுவிப்பாளர் கெளரவிக்கப்பட்டனர்.