-கிளிநொச்சி நிருபர்-
தருமபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் நேற்று புதன்கிழமை இரவு வீட்டு உரிமையாளர்கள் உறங்கிக் கொண்டிருந்த சமயம் வீட்டுக் கூரையைப் பிரித்து வீட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த ஐந்து பவுன் பெறுமதி மிக்க தங்க நகைகளும் நாற்பத்தி ஒன்பது ரூபாய் பணமும் 49500 திருடப்பட்டுள்ளது.
அத்துடன் பெறுமதிமிக்க இரண்டு தொலைபோசிகள் மற்றும் உரிமையாளரின் பாவனையிலுள்ள மோட்டார் சைக்கிளில் இருந்த எரிபொருளையும் களவாடிச் சென்றுள்ளனர்.
இதன்போது வீட்டு உரிமையாளருக்கோ வீட்டுதளபாடங்களுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தப்படாத வகையில் நூதனமான முறையில் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது உரிமையாளர்களுக்கு அதிகாலை எழுந்து பார்த்தபோது தெரியவந்துள்ளது வீட்டில் திருடு போன விடயம் பின்னர் இச்சம்பவம் தொடர்பாக தருமபுரம்பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் இச்சம்பவம் தொடர்பாக தடயவியல் பொலிசார், தருமபுர பொலிசார் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.