கம்பளை பிரதேசத்தில் திருமணமான தனது மகளுடன் வசிக்கும் 82 வயது பெண்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் கைது செய்யப்பட்டு நீதி மன்றில் முன்னிலைபடுத்திய போது எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பளை பதில் நீதிவான் காந்திலதா உத்தரவிட்டுள்ளார்.
குருந்துவத்த வாகெதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயது நபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணின் மகள் சந்தேக நபரின் இளைய சகோதரனை திருமணம் செய்துள்ளதாகவும் யாரும் இல்லாத நேரத்தில் சந்தேக நபர் வீட்டுக்குச் சென்று துஷ்பிரயோகம் செய்ததாகவும், இதுபற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றும் கூறியதாகவும் பொலிஸ் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.