குளவிக் கொட்டுக்கு இலக்காகிய 8 பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில்

பொகவந்தலாவ – கெர்க்கஸ்வோல்ட் மேல்பிரிவு தோட்டப் பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை 8 பெண் தொழிலாளர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

தேயிலைக் கொழுந்து பறித்துக் கொண்டிருந்தபோது அவர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளதுடன் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் கூறியுள்ளனர்.

அவர்களில் 6 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ள நிலையில் ஏனைய இருவரும் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்