இலங்கையில் உள்ள காலி மாவட்டத்தில் 8 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 76 வயதுடைய விஹாராதிபதி ஒருவர் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு காலி மேலதிக நீதவான் லக்மினி விதானகமகே நேற்றைய தினம் திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
யக்கஹா வலஹந்துவ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் விஹாராதிபதியாக செயற்பட்ட 76 வயதான தேரர் ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான தேரர், சிறுமியை விகாரைக்கு அருகில் உள்ள வீட்டின் அறைக்குள் அழைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.இதனை அவதானித்தஒருவர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து பொலிஸார் சந்தேக நபரை கைது செய்ததுடன் சிறுமியை கராபிட்டிய வைத்தியசாலையில் சட்ட வைத்தியரிடம் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அங்கு சிறுமி துஷ்பிரயோகத்திற்குள்ளாகியுள்ளதனை தடயவியல் மருத்துவ அதிகாரிகள் உறுதி செய்த நிலையில் விஹாராதிபதியை விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.