• Likes
  • Followers
  • Subscribers
  • Followers
Sign in

Welcome, Login to your account.

Forget password?
Sign in

Recover your password.

A password will be e-mailed to you.

  • Tuesday, April 14, 2026
  • தொடர்புகளுக்கு :- +94 65 222 7172 Mobile & Whatsapp :+94 76 273 2793

Minnal24 Minnal24 - Batticaloa News

  • செய்திகள்
  • Batticaloa News
  • உலக செய்திகள்
  • இந்திய செய்திகள்
  • Swiss Tamil News
  • Videos
  • Job Vacancies
Minnal 24 News
  • Home
  • செய்திகள்
  • 8 மாதங்களின் பின் கண்டு பிடிக்கப்பட்ட சிறுமி : 22 வயது இளைஞன் கைது!
செய்திகள்

8 மாதங்களின் பின் கண்டு பிடிக்கப்பட்ட சிறுமி : 22 வயது இளைஞன் கைது!

By News Editor Last updated Jul 8, 2023
Share

-பதுளை நிருபர்-

கடந்த 8 மாதங்களுக்கு முன் காணாமல் போன 14 வயது சிறுமி ஒருவர் பேலியகொட பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

குறித்த 14 வயது சிறுமி பேலியகொட பகுதியில் தனது 22 வயது காதலனுடன் தங்கியிருந்த நிலையில் பேலியகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வருடம் டிசம்பர் 24 ஆம் திகதி லுணுகல சூரியகொட பகுதியில் உள்ள 14 வயது சிறுமி ஒருவரை காணவில்லை என சிறுமியின் பெற்றோரால் லுணுகல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

மேலதிக வகுப்பிற்கு சென்று வருவதாக தெரிவித்து வீட்டிலிருந்து வெளியேறிய சிறுமி காணாமல் போயிருந்தார்.

அதனைத்தொடர்ந்து லுணுகலை பொலிஸாரால் சிறுமி குறித்த தகவல்கள் அனைத்து பொலிஸ் நிலையத்திற்கும் வழங்கப்பட்டு தேடுதல் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் லுணுகலை பொலிஸார் வழங்கிய தகவலுக்கு அமைவாக பேலியகொட பொலிஸாரால் குறித்த சிறுமியும் 22 வயது இளைஞர் ஒருவரும் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டு லுணுகலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த சிறுமி அதே பகுதியை சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவருடன் பேலியகொட பகுதியில் வாடகை விடுதியொன்றில் தங்கியிருந்தமை தெரிய வந்துள்ளது. மேலும் காணாமல் போன போது 14 வயதாக இருந்த குறித்த சிறுமியின் வயது தற்போது 15 வயதும் 4 மாதங்களும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுமியை கடத்தி துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குறித்த 22 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இருவரும் இன்று சனிக்கிழமை பதுளை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

  • செய்திகள்
  • நிகழ்வுகள்
  • உலக செய்திகள்
  • Videos
Join in Our Whatsapp Group
Batti News Todaybatti news today tamil சித்திரை 1 2023battinewsbattinews todaycomplaintdeath poster sinhalafuel pass qr code login. நலன்புரி நன்மைகள் பெயர் பட்டியல்household list
Share
தலைப்புக்கள்
  • உலக செய்திகள்2407
  • நிகழ்வுகள்2103
  • Videos1364
  • இலங்கை செய்திகள்1100
  • இந்திய செய்திகள்1082
  • கட்டுரை627
  • விளையாட்டு486
  • ஏனைய தொகுப்புரைகள்435
  • ஆரோக்கியம்256

ஏனையவை

வெற்றிலையின் விலை அதிகரிப்பு!

போப் லியோ அவருடைய வேலைகளை மட்டும் பார்க்க வேண்டும் –…

இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள…

கந்தளாய்-யானைக்கல் பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தி…

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி!

Prev Next 1 of 138

Latest News

வெற்றிலையின் விலை அதிகரிப்பு!

Apr 13, 2026

போப் லியோ அவருடைய வேலைகளை மட்டும் பார்க்க வேண்டும் – டொனால்ட் ட்ரம்ப்

Apr 13, 2026

இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

Apr 13, 2026

கந்தளாய்-யானைக்கல் பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை!

Apr 13, 2026

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி!

Apr 13, 2026

தேசிய கல்வியியல் கல்லூரிகளின் நேர்முகத்தேர்வு தொடர்பான முக்கிய அறிவிப்பு!

Apr 13, 2026

தெய்வாதீனமாக காப்பாற்றப்பட்ட 7 பேரின் உயிர்கள்!

Apr 13, 2026

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்காக மேலதிக பஸ்கள் சேவையில்!

Apr 13, 2026

எயார் நியூசிலாந்து நிறுவனத்தின் 90 விமான சேவைகளை ரத்து!

Apr 13, 2026

திஹாரிய தாருஸலாம் ஆரம்பப் பாடசாலையில் பதவி ஏற்பு வைபவமும், சின்னம் சூட்டும் நிகழ்வும்!

Apr 13, 2026
Prev Next 1 of 4,934
© 2026 - Minnal 24 News. All Rights Reserved.
Minnal24.com is Ministry of Mass Media Registered News Website Proudly Owned by: Balanze Media
You cannot print contents of this website.
Sign in

Welcome, Login to your account.

Forget password?
Sign in

Recover your password.

A password will be e-mailed to you.