கொழும்பு – கண்டி பிரதான வீதியில் கனேதென்ன பகுதியில் வீதியை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கடுகன்னாவ பகுதியில் வீதியில் மண்மேடு மற்றும் பாறைகள் சரிந்து விழுந்துள்ளதன் காரணமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாறைகள் சரிந்து விழுந்ததில் வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றிற்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
தற்போது அப்பகுதியில் லேசான மழை பெய்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.








