முல்லைத்தீவு மாவட்டத்தின் 8 பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 8 பாடசாலைகளை இடைத்தங்கல் முகாம்களாக பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 3 பாடசாலைகளதும், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 5 பாடசாலைகளதும் கற்பித்தல் செயற்பாடுகள் இன்றைய தினம் செவ்வாய் கிழமை இடம்பெறமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.