மாத்தறை பகுதியில் 80 இலட்சம் ரூபா பெறுமதியான 8 கிலோ அம்பருடன் இரண்டு சந்தேக நபர்கள் ஹம்பாந்தோட்டை இராணுவ புலனாய்வு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய மாத்தறை குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர் .
மிரிஸ்ஸ பகுதியை சேர்ந்த 29 வயதுடைய நபரொருவரும் வெலிகம பகுதியை சேர்ந்த 34 வயதுடைய நபரொருவருமே கைது செய்யப்பட்டுளனர்.
அம்பர் எனப்படும் பொருள் திமிங்கலங்களின் உடலிலிருந்து பெறப்படுகிறது. இந்த பொருள் உலகின் விலை உயர்ந்த வாசனை திரவியம் தயாரிக்க பயன்படுகிறது. இதனால் திமிங்கலங்கள் கொல்லப்படும் நிலையில் இதனை விற்பனை செய்ய இலங்கை தடைவிதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .