உரும்பிராயில் நேற்று புதன் கிழமை 70 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாதகலை பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியில் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போதே இந்த கஞ்சா மீட்கப்பட்டு அவற்றை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.