-கிரான் நிருபர்-
மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவணை கால்நடை பண்ணையாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 6 பல்கலைக்கழக மாணவர்கள் களுவங்கேனி சந்தியில் வைத்து பொது போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் இன்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றினைந்து, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பண்ணையாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து இன்று காலை 9 மணியளவில் முறக்கொட்டன்சேனை மாரியம்மன் ஆலய முன்றலில் ஒன்று கூடி ஆர்ப்பாட்ட ஊர்வலமாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பண்ணையாளரின் இடம் வரை சென்று அங்கு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ் பல்கலைகழத்தை சேர்ந்த 5 மாணவர்களும் கிழக்கு பல்கலைகழகத்தை சேர்ந்த ஒரு மாணவருமே சட்டவிரோத ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு பொது வீதி போக்குவரத்துக்கு இடையூறு விளைத்த குற்றசாட்டின் கீழ் இவ்வாறு கைது செய்யப்பட்டு தடுத்து வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையின் பின்பு சட்ட வைத்திய அதிகாரியிடம் காண்பித்து ஏறாவூர் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவத்தினை அறிந்த பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கயேந்திரன் கயேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வருகை தந்துள்ளனர்.

