தைவானின் தென்கிழக்கு கடற்கரை பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் பிற்பகல் 2:44 மணிக்கு டைடுங் நகருக்கு வடக்கே 50 கிமீ (30 மைல்) தொலைவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு அருகில் இரண்டு மாடி குடியிருப்பு கட்டிடம் , மற்றும் ஒரு கடை இடிந்து விழுந்ததுள்ள நிலையில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக உள்ளூர் ஊடக அறிக்கை தெரிவித்துள்ளது.
சனிக்கிழமையன்று 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் அதே பகுதியைத் தாக்கியது மற்றும் சனிக்கிழமை முதல் பல அதிர்வுகள் இப்பகுதியில் ஏற்பட்டுள்ளன.
தைவான் அருகே உள்ள தொலைதூர தீவுகளுக்கு ஜப்பான் வானிலை ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கையை வெளியிட்டது.
கடல் அலைகள் ஒரு மீற்றர் உயரம் வரை தாய்வான் நேரம் மாலை 4:10 மணிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையமும் கடலோரப் பகுதியில் நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து 300 கிமீ (190 மைல்) தொலைவில் அபாயகரமான சுனாமி அலைகள் வரக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த தீவுகள் டோக்கியோவிலிருந்து தென்மேற்கே சுமார் 2,000கிமீ (1,200 மைல்) தொலைவில் உள்ளன. அந்த பகுதிகளில் வசிப்பவர்கள் கடற்கரையை விட்டு விலகி இருக்குமாறு வானிலை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.