இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள கோண்டா மாவட்டத்தில் கோட்வாலி பகுதியைச் சேர்ந்த 50 வயது இந்தி ஆசிரியர் இந்தி படிக்க 17 வயது மாணவியை கடந்த ஜூலை மாதம் யாருக்கும் தெரியாமல் அழைத்து சென்றுள்ளார்.
குறித்த மாணவி வீட்டில் இருந்த 30,000 ரூபாய் மற்றும் நகைகளை எடுத்துச் சென்றுள்ளார். இதனையடுத்து மகளை காணவில்லை என பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகார் தொடர்பாக 3 மாதங்களாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே மாணவியுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோவை ஆசிரியர்இ மாணவியின் பெற்றோர் கிராம மக்களுக்கு அனுப்பியதால் அவமானமடைந்த மாணவியின் குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.