புதையல் தோண்ட முயன்ற 5 பேர் கைது

-வவுனியா நிருபர்-

வவுனியாவில் புதையல் தோண்ட முயன்ற பூசாரி உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஓமந்தைப் பொலிசார் நேற்று ஞாயிற்று கிழமை தெரிவித்துள்ளனர்.

வவுனியா, ஓமந்தைப் பொலிசாருக்கு கிடைத்த விசேட தகவலையடுத்து விளாத்திக்குளம் பகுதியில் இரவு விசேட கண்காணிப்பு நடவடிகையில் ஈடுபட்ட போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கண்டி பகுதியில் இருந்து வருகை தந்த பூசாரி மற்றும் வவுனியாவின் தவசிகுளம், ஓமந்தை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நால்வருமாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின் குறித்த 5 பேரையும் வவுனியா நீதிமன்றில முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்